பிறந்த இரண்டு மணி நேரத்தில் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் பெற்ற குழந்தை! எங்கு தெரியுமா?

பிறந்த இரண்டு மணி நேரத்தில் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் பெற்ற குழந்தை! எங்கு தெரியுமா?



gujarat baby got all govt ids in 2 hrs

நமது ஊரில் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கே ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால் குஜராத்தில் பிறந்த 2 மணிநேரத்தில் குழந்தை ஒன்றிற்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்து அரசு சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள் அங்கித் - பூமி தம்பதியினர். இவர்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடனே ரம்யா என பெயர் வைக்கப்பட்டது. மேலும் குழந்தை பிறந்து உடனேயே அதற்கு அதற்கு தேவையான அணைத்து அரசு சான்றுகளையும் பெற வேண்டுமாம் என குழந்தையின் பெற்றோர் திட்டமிட்டனர். 

gujarat

ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்தையும் வேகமாக பெற்று நமது குழந்தை சாதனை படைக்க வேண்டும் என பெற்றோர் எண்ணினர். அதன்படி தங்கள் குழந்தைக்கு அனைத்தையும் பெறுவதற்காக முன்கூட்டியே அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

அவர்களின் திட்டப்படி அந்த பெண் குழந்தை பிறந்ததை உடனடியாக பதிவு செய்து சூரத் மாநகராட்சி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழ் உடனடியாக வழங்கினர். இதை பயன்படுத்தி ரேஷன் கார்டு மற்றும் ஆதாருக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. அதுபோலவே ஒரே நேரத்தில் பாஸ்போர்ட் பெறவும் அங்கீத் விண்ணப்பத்தை அனுப்பினார்.

gujarat

முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் தயாராக இருந்ததால் உடனடியாக வேலைகள் நடந்தன. குழந்தை பிறந்த 2 மணிநேரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு என அனைத்தும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து குழந்தையின் தந்தை அங்கீத் கூறுகையில் ‘‘பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டேன். அரசின் அனைத்து ஆவணங்களும் மிக குறைந்த நேரத்தில் பெற்ற குழந்தை எங்கள் குழந்தை தான் என்று நினைத்து பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய அணைத்து அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றி" என தெரிவித்தார்.