என்னடா முகவரி இது..? கோயிலுக்கு வந்தபின்பு..? ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான முகவரி..! என்ன எழுதியிருந்தது தெரியுமா..?

என்னடா முகவரி இது..? கோயிலுக்கு வந்தபின்பு..? ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான முகவரி..! என்ன எழுதியிருந்தது தெரியுமா..?


Funny delivery address for online shopping

ஆன்லைனில் பொருள் வாங்கிய கஸ்டமர் ஒருவர் மிகவும் வித்தியாசமாக தனது முகவரியை கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக முகவரியை வைத்து வீட்டை தேடி வருபவர்களுக்கு, வீட்டை கண்டுபிடிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. பலநேரங்களில் குறிப்பிட்ட முகவரி எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிப்பதே பெரிய சவாலாக அமைந்துவிடும். அதிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தவர்களின் பொருளை டெலிவரி செய்பவர்களுக்கு இதை பற்றி சொல்லவே தேவை இல்லை.

சிலர் 2-வது குறுக்குத் தெரு 5-வது சந்து என்று அலையவிடுவார்கள். அப்படியே தேடிப்பிடித்து வீட்டிற்கு சென்றாலும் நான் இப்போது வீட்டில் இல்லை, நாளை வாருங்கள் என்று அலையவிடுவதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் பொருள் வாங்கிவிட்டு, டெலிவரி செய்ய அவர் கொடுத்துள்ள முகவரி தற்போது வைரலாகிவருகிறது.

அந்த முகவரியில் அவர் எழுதியிருப்பதாவது, அந்த பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வந்த பின்பு கால் செய்தால் போதும், நானே வந்து வாங்கி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும், இனி தாங்களும் இதுபோன்று முயற்சிப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.