இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.! ஒரே நாளில் 15 பேர் பலிcorona increased in india

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துவந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்தநிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,594 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2228 ஆக அதிகரித்து இன்று 8,822 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளனர்.  

தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் குழந்தைகளை கொரோனா தொற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது.? அதேவேளை குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதும் பெற்றோர்களின் மனநிலையாக உள்ளது.