இந்தியா Covid-19

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி தான் செலுத்திக்கொள்ள வேண்டும்.! கோரிக்கை வைத்த காங்கிரஸ்.!

Summary:

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ துவங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சமீபத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , பைசர் நிறுவனங்கள்  தடுப்பூசி தயாரித்து உள்ளன.

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா, முதல் தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement