அரசியல் இந்தியா

உ.பி. தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு.? காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார்.!

Summary:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரி அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர்.  காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா ஆவார்.

ஜிதின் பிரசாதா ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார்.  இந்தநிலையில் இவர் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.  டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பா.ஜ.க வில் இணைந்தார். 

2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஜிதின் பிரசாதா. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இவர் பாஜகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Advertisement