பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு.! சுடுகாட்டிலும் டோக்கன்.!

பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு.! சுடுகாட்டிலும் டோக்கன்.!



bodies-waiting-to-be-cremated

இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா 2-வது அலை உருவாகி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் நாள்தோறும் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் சடலங்களை எரிக்க மின்மயானங்கள் இல்லாமல் சாலையோரங்களிலும் ஆற்றின் கரையோரங்களிலும் எரித்து வரும் அவலம் தொடர்கிறது.

corona

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.