சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிழ்விக்க வருகிறார் பிக்பாஸ் யாஷிகா!

Summary:

Yashika act in suntv serial

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் . இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தராதநிலையில், யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக களமிறங்கினார். அப்பொழுது அவர் மற்றொரு  போட்டியாளரான நடிகர் மஹத்துடன் காதல் வயப்பட்டு பின்னர் விலகினார். 

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் கழுகு,  ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவன்தான் உத்தமன், ராஜபீமா உள்ளிட்ட பல  படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் யாஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜோடி நிகழ்ச்சியில்  நடுவராகவும் பங்கேற்றார்.

இவ்வாறு சினிமாக்களில் நடித்து வந்த யாஷிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், அவர் நடித்த சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் யாஷிகா சீரியலில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. 


Advertisement