சினிமா

"நான் சில பெண்களுடன்... ஆனால்.. " மீடூ பற்றி வெளிப்படையாக பேசிய விஷால்!

Summary:

Vishal about dating and metoo

மீடூ இயக்கத்தின் மூலம் திரைத்துறையை சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு பல்வேறு வழிகளில் பாலியல் தொல்லைகள் நேர்ந்துள்ளதாக புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களின் நன்மதிப்பை இழந்து தவிக்கின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் "நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தில்லை. மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வாய்ப்புக்காக பெண்களை தங்கள் ஆசைக்கு பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த துறையாக இருந்தாலும், நடிகைகளுக்கு ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். 

குற்றவாலிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயகாகத்தை சிலர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்கு பழிவாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் மீடூவை ஆயுதமாக வைத்து பழிவாங்க நினைப்பது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார். 


Advertisement