தமிழகம் சினிமா

அயோக்கியா படத்தின் குத்துப் பாடலுக்காக களமிறக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகை; யார் தெரியுமா?

Summary:

vishal - ayyokkia - new tamil movie shredha das

சண்டகோழி-2’ படத்துக்கு பிறகு ‘அயோக்கியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் இடம்பெறும் குத்துப் பாடல் ஒன்றுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை சன்னி லியோன் சம்பளம் கூடுதலாக கேட்பதால் அவருக்கு பதில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 

 


Advertisement