நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
படப்பிடிப்பு முடிஞ்சு நாடு திரும்பிய தளபதி விஜய்! முதல் வேலையாக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது காமெடியால் சிரிக்க வைத்தது மட்டுமின்றி ரசிகர்களை சிந்திக்க வைத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு கடந்த 16ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 17ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சின்னக்கலைவாணரின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஏராளமான நடிகர் நடிகைகள் அவரது வீட்டிற்கு சென்று விவேக்கின் இறுதிநிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விவேக்குடன் பல படங்களில் இணைந்து நடித்து வந்த நடிகர் விஜய் , அப்பொழுது நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்தார். அதனால் அவரால் நடிகர் விவேக்கின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தளபதி 65 படப்பிடிப்பு முடிந்து நேற்று ஜார்ஜியாவில் இருந்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். வந்தவுடனேயே முதல் வேலையாக நடிகர் விஜய் இன்று காலை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளாராம்.