13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. என்ன காரணம்.?
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
வில்லனாக மாஸ்டர், விக்ரம், பேட்ட போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமீபத்தில் இந்தியில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து பாராட்டைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171 வது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை என்றே முடிவை எடுத்துள்ளாராம். இதனால் ரஜினியின் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.