அம்மா மாதிரியே செம கியூட்.! மகனை கொஞ்சி மகிழும் விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்!!

அம்மா மாதிரியே செம கியூட்.! மகனை கொஞ்சி மகிழும் விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்!!


vignesh-shivan-post-viral-nj7pd6

தமிழ் சினிமாவில் இளம் பிரபல இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா வெளிவந்து ஹிட்டான காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் அவர் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய போது நடிகை நயன்தாராவுடன் காதலில் விழுந்தார். அதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அப்பபோது நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். அந்த வகையில் அவர் தற்போது தனது மகனை கொஞ்சும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!..

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது என பகிர்ந்துள்ளார்.அது வைரலாகி வருகிறது.