சினிமா

அசத்தலான போஸ்டருடன் வாத்தி படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! செம எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்!!

Summary:

20 வருட நிறைவு! அசத்தலான போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! செம எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். அவரது கைவசம் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்கள் உள்ளன. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ளார். தமிழில் வாத்தி என்ற பெயரில் உருவாகும் இப்படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 'வாத்தி' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அவர் பள்ளி மாணவனாக நடித்திருந்த புகைப்படத்தையும், தற்போது வாத்தி படத்தில் பள்ளி ஆசிரியராக வரும் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அதில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்படுள்ளது. 

 


Advertisement