சினிமா

நடிகை வரலட்சுமி எடுத்த புதிய அவதாரம்...!

Summary:

varalakshmi-sarathkumar-now-turns-as-a-vj

பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமாரின் மகள் வரலெட்சுமி, போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்துள்ள சண்டகோழி 2, சர்கார் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நீயா இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில் வரலெட்சுமி அவரால் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் 'உன்னை அறிந்தால்' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. 

ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி  என பலர் தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.தற்போது இவர்கள் வரிசையில் வரலெட்சுமியும் இணைந்துள்ளார். இது சமூக பிரச்சனைகளை பற்றி அலசும் நிகழ்ச்சி எனத் தெரிகிறது.  இதன் புதிய புரோமோ வீடியோக்கள் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. 

 

Lets stop questioning what other have done.. and lets start asking ourselves what are we doing..?! Join me on this new venture to try and be the change.. if we change so will the world #unnaiarinthal @JayaTvOfficial #jayatv #Oct14 https://t.co/1XNMUprXTF #BeTheChange #oct14 pic.twitter.com/FAr2mMWYEl

— varu sarathkumar (@varusarath) October 7, 2018

 


Advertisement