இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் தற்கொலை செய்த தருணத்தில் அதே வீட்டில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்கள்..! போலீசார் விசாரணை..!

Summary:

Sushanth singh suicide case update

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீகாரில் பிறந்து வளர்ந்த சுஷாந்த் சிங் 2013-ம் ஆண்டு வெளியான Kai Po Che படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தோனியாக திரையில் தோன்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் மிக சரியாக பயன்படுத்தி இந்திய ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  சில மாதங்களாக கடும் மனஅழுத்ததில் இருந்ததாகவும், அதன் காரணமாகாவே சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது அவருடைய வீட்டில் அவரது நண்பர்களும் இருந்துள்ளனர். இதனால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement