ஹாலிவுட் தரத்தில் தயாராகும் சிவகார்த்திகேயனின் புதிய படம்; ரசிகர்கள் உற்சாகம்.!

sivakarthikeyan new flim - hollywood range


sivakarthikeyan-new-flim---hollywood-range

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான அறிவியலை மையமாக கொண்டு ஹாலிவுட் தரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் எம்.ராஜேஷ் இயக்கத்திலும், நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் பெயரிடப்படாத அறிவியலை மையமாக கொண்டு உருவாகும் புதிய படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார்.

sivakarthikeyan

இந்தப் படம் குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேசும் போது, “இது, அறிவியல் சார்ந்த படம். இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். 

அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். 

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ‘அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிகர்கள் கருணாகரன் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார் இயக்குனர்.