அடேங்கப்பா!. சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பை பார்த்தீர்களா!! இது ரஜினியின் அந்த ஹிட் பட வசனமாச்சே!!

அடேங்கப்பா!. சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பை பார்த்தீர்களா!! இது ரஜினியின் அந்த ஹிட் பட வசனமாச்சே!!


sivakarthickeyan-next-movie-title-is-singapathai

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அயலான் மற்றும் டாக்டர்  திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அட்லீயின் துணை இயக்குனர் அஷோக் இயக்குகிறார்.

sivakarthickeyan

இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது  சிங்கப்பாதை என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி  திரைப்படத்தில் 'இனி நான் போற பாதை சிங்க பாதை' என ரஜினி ஆக்ரோஷமாக பேசியிருப்பார்.  அந்த  வசனத்தை சிவகார்த்திகேயன் படத்திற்கு
தலைப்பாக வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.