விஜய் ரசிகர்களிடம் பிரபல இயக்குனரை கோர்த்து விட்ட சிவகார்த்திகேயன்!! என்ன வேலை செய்துள்ளார் பார்த்தீர்களா!!sivakarthickeyan-asked-thalapathy-65-update-to-nelson

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார்., 

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சி பி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் டாக்டர் மற்றும் தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

அதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? (எப்படி கோர்த்து விட்டேனா?) எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த நெல்சன், "ஹா...ஹா.. அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா” என பதிவிட ’ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது’ என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.