சினிமா

பிரபல சீரியல் நடிகருக்கு தற்போது இப்படியொரு நிலைமையா!! வருத்தத்துடன் அவரே என்ன கூறியுள்ளார் தெரியுமா??

Summary:

seria actor work as tourist guide

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் குலதெய்வம். இந்த தொடரில் ரோகித் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவித்ரன். இந்த சீரியலை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடிப்பு வருகிறார்.

மேலும் அந்த சீரியல்களில் மட்டுமே நடித்துவரும் பவித்ரன் தற்போது சுற்றுலா வழிகாட்டியாக அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்து பவித்ரன் தனியார் தொலைக்காட்சி ஒன்று எடுத்த பேட்டியில் கூறுகையில், நான்  விஸ்காம் முடித்து பாபிசின்ஹா நடிப்பில் உருவான படத்திற்கு இயக்குனராக சேர்ந்தேன். பின்னர் கொஞ்ச நாள் மாடலிங் செய்த எனக்கு குலதெய்வம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்புடைய படம்

அதன் மூலம் பிரபலம் அடைந்த நிலையில் தொடர்ந்து எனக்கு யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் மாதம் 10 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாது.  இந்நிலையில்தான் எக்ஸ்ப்ளோர் வித் பவின் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து சுற்றுலா வழிகாட்டியான இந்த வேலையை பார்த்து வருகிறேன்.

மேலும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வரை வேலை இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க கூடாது என நினைத்தேன். அதனாலே இதனை தொடங்கினேன். தற்போது சீரியல்களில் நடிக்கும் முக்கால்வாசி ஆர்ட்டிஸ்ட்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது என்று வருத்தத்துடன் கூறினார்.
 


Advertisement