சோகமான ஃபீல் வரவே இல்லை! அனிதா சம்பத் கதையை கிண்டல் செய்த பிரபலம்! கடுப்பாகி அவரது கணவர் கொடுத்த பதிலடியை பார்த்தீர்களா!

சோகமான ஃபீல் வரவே இல்லை! அனிதா சம்பத் கதையை கிண்டல் செய்த பிரபலம்! கடுப்பாகி அவரது கணவர் கொடுத்த பதிலடியை பார்த்தீர்களா!


sathish-troll-anitha-sampath-story

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இந்நிலையில் கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள் குறித்து பேசி இருந்தனர். அப்பொழுது அனிதா சம்பத்தும் தனது கதையை கூறியிருந்தார்.

இதனை கண்ட பிரபல நடன இயக்குனரான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிதா உங்க ஸ்டோரியை கொஞ்சம் ஸ்லோவா சொல்லுங்க. ரீகேப் பண்ணி பார்த்தால்தான் புரியும் போல. சோகமான ஃபீல் வரவே இல்லை. ஏன்னா புரியல என பதிவிட்டிருந்தார்.  

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில், 
ஏன்டா நீங்க பசினு தெரியாம வளர்ந்து இருந்தா  கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசியே தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவிச்ச பசியையும் வலியையும் கிண்டல் பண்ண தோணும்.  பின்குறிப்பு: கோரியோகிராபர் னா டான்ஸ் ஆடலாம் டா... ஆணவத்துல ஆட கூடாது என  தெரிவித்திருந்தார்.

அதற்கு சதீஷ் மீண்டும் சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா சோகமா தான இருக்கும்னு நெனைச்சா என்னனு சொல்றது? ப்ளீஸ் இது சோகமான ஸ்டோரி நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல? உங்க ஆட்டம் என்ன ஆட்டம் னு தெரியல. அவங்க உள்ள அழுவுறதும், நீங்க வெளியே அழுவுறதும்.. எப்பா சாமி. BP டேப்லெட் வாங்கி வெச்சுக்கோங்க என பதிலளித்துள்ளார்.