"டாப்பு டக்கரு சாத்து உடணும்" ஸ்டேட்டஸ் வைக்க தயாரா! வெளியானது சர்க்கார் மாஸ் வீடியோ



sarkar status video

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், சமீபத்தில் கதை திருட்டு தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று சர்க்கார் வெளியாகும் என உறுதியாகிவிட்டது. படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் படத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியது.

sarkar status video

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் மிக விரைவாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் "டாப்பு டக்கரு சாத்து உடணும்" என்ற பாடலை வைத்து சர்க்கார் படக்குழு வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதை கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் whatsapp ஸ்டேட்டஸில் வைப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.