பிக் பாஸ் புகழ் சரவணன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.
தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.
ஆனால் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.கடந்த வாரம் கமலும் அதைப்பற்றி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். இதனால் ரசிகர்கள் சரவணன் என்ன ஆனார் என்பது குறித்து அறியாமல் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சரவணன் மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதினை தனது குழந்தையுடன் சென்று வாங்குகிறார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை பார்த்ததில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.