சினிமா

சூப்பர் ஸ்டாருடன் திடீர் பேச்சுவார்த்தை நடத்திய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் ந

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு என பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

 அதனைத் தொடர்ந்து தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது. அதில் நயன்தாரா மற்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அதே ஸ்டுடியோவில் ஜேடி, ஜெர்ரி என இருவர் இணைந்து  இயக்கும் படத்தில் லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவெளியில் சரவணன் அருள் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 


Advertisement