ரஜினி168 படத்தின் கதை எப்படிப்பட்டது! முதன்முறையாக கூறிய இயக்குனர் சிவா! உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

ரஜினி168 படத்தின் கதை எப்படிப்பட்டது! முதன்முறையாக கூறிய இயக்குனர் சிவா! உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!



Rajini 168 siva

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சமீபத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் A. R முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் படமாக்கப்படும் இப்படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது ரஜினி அவர்கள் புதிதாக சிறுத்தை சிவாவுடன் இணைவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

rajini

சிறுத்தை சிவா இதற்கு முன்பு தல அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளதால் இந்த படமும் ஒரு மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்நிலையில் தற்போது சிவா அவர்கள் ரஜினி 168 படத்தின் கதை அனைவருக்கும் பிடித்த ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமா இருக்கும் என கூறியுள்ளார்.