சினிமா

படுக்கையறையில் பிக்பாஸ் ரைசாவிற்கு நேர்ந்த பரிதாபம்! எப்படி இது நேர்ந்தது? வைரலாகும் ஷாக் புகைப்படம்!

Summary:

raiza got a fracture in lip while taking selfi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.  

அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி  'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரைசா  தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாயில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் தான்  படுக்கையில் படுத்தவாறே செல்ஃபி எடுக்கும் போது, அவரது மொபைல் போன் கைத்தவறி அவரது வாயிலே விழுந்துவிட்டதாகவும், அதனால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement