பிரதமரின் பாதுகாவலராக சூர்யா

பிரதமரின் பாதுகாவலராக சூர்யா


PM Security garud acting surya

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கேவி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேவி ஆனந்த் சூர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைக்கப்படாததால் சூர்யா 37என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜில்லா திரைப்படத்திற்குப் பிறகு மோகன்லால் இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் சூர்யா மற்றும் மோகன்லால் நடிக்கும் கதாபாத்திரம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும், அவரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நொய்டாவில் படப்பிடிப்பு இடைவெளியில் தேசிய பாதுகாப்புப் படை முக்கிய அதிகாரிகளான பிரிகேடியர் கௌதம் கங்குலி மற்றும் டிஐஜி ஷாலின் ஐபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்தார் சூர்யா. அவர்களுடைய சந்திப்பு தன் வாழ்நாளில் மறக்க முடியாதது எனவும் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் பிரதமராக நடிக்கிறார் என்றால், இந்திய அரசியல் தொடர்பான படமாக இருக்குமோ எனக் கேள்வி எழுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். மேலும், ஆர்யா, பொமன் இரானி, அட்டல் ஷர்மா, மனோஜ் ஆனந்த், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் படத்தில் நடிக்கும் சூர்யா அடுத்தும் அரசியல் தொடர்பான கதையில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.