ரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால் - TamilSpark
TamilSpark Logo
சினிமா

ரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.  இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் பிகினி போன்ற ஹாட் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்புகைப்படத்தை வெளியிட்ட சில மணி துளிகளிலேயே 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.


Advertisement
TamilSpark Logo