திருமணமாகி ஒரு மாதத்திற்கு பிறகு.. நயன்- விக்கி ஜோடி வெளியிட்ட திருமண புகைப்படங்கள்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நயன் மற்றும் விக்கி ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு தரிசனம், தாய்லாந்திற்கு ஹனிமூன் செல்வது என பிஸியாக இருந்து வந்தனர். மேலும் தற்போது நயன்தாரா சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதாவது ஷாருக்கான், ரஜினி, அனிருத், சூர்யா- ஜோதிகா தம்பதியினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.