நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜாதி, மதம்னு ஒரே பிரச்சனை - ராஜ்கிரண் மகளை காதலித்து கரம்பிடித்த சீரியல் நடிகர்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் முனீஸ் ராஜா. நாதஸ்வரம் தொடரில் இவரின் பேச்சும், நகைச்சுவையும் காண்போரை ரசிக்க வைத்தது.
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரிலும் நடித்திருந்தார். சின்னத்திரையை தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும், அவருக்கு திரைப்படங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.
சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கிய முனீஸ் ராஜா, பழனி தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்கி தோல்வி அடைந்தார். இந்நிலையில், நடிகர் முனீஸ் ராஜாவுக்கும் - நடிகர் ராஜ்கிரணின் மகளுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜ் கிரணின் மகள் ஜீனத் பிரியாவிற்கும் - முனீஸ் ராஜாவிற்கு இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, இவ்விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில், பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்துள்ளனர். முனீஸ் ராஜாவின் வீட்டில் அவரின் காதல் திருமணம் ஏற்கப்பட்டாலும், ராஜ்கிரணின் வீட்டில் ராஜ்கிரண் மட்டும் மகளின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முனீஸ் ராஜா தெரிவிக்கையில், "எனக்கும் - ஜீனத் பிரியாவுக்கும் திருமணம் ஆனது உண்மைதான். முகநூலில் அவரை முதன் முதலாக பார்த்தேன். அப்படியே அவரிடம் காதலை வெளிப்படுத்தினேன். அவரும் சம்மதம் என்றார்.
திருமணம் என்றபோது இருதரப்பும் முதலில் எதிர்த்து. ஜாதி, மதம் என சிக்கலும் எழுந்தது. இப்போது திருமணம் செய்துவிட்டோம். பிறர் மனது புண்பட கூடாது என எப்போதும் இருப்பேன். வரும் நாட்களில் இரண்டு குடும்பமும் இணைய தேவையான முயற்சியை எடுப்பேன்" என்று தெரிவித்தார்.