இத்தனை வருட நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் - விஷாலை நேரடியாக விமர்சித்த வரலட்சுமி!

இத்தனை வருட நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் - விஷாலை நேரடியாக விமர்சித்த வரலட்சுமி!


nadikar-sangam-vishal-varalakshmi

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றன. மொத்தம் 69 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்ததாக  கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து தனது தந்தையை தவறாக கூறியதற்கு  கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

nadrkar sangam

அன்புள்ள விஷால், 
சமீபத்தில் வெளியான உங்களுடைய தேர்தல் பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை காட்டுகிறது. உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது போய்விட்டது என்றும், என் தந்தையின்  கடந்த காலத்தின் மீது நீங்கள் குத்தியுள்ள முத்திரையை பார்த்து மிகவும் வருந்துகிறேன். அதை உங்களால் நிரூபிக்கவே முடியாது. சட்டத்தை மதிப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் அதே சட்டம் தான் எந்த ஒரு மனிதனும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான் என்கிறது. 

அவர் குற்றவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். எனவே உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற கேவலமான வீடியோக்களை வெளியிடும் போது அது உங்களுடைய தகுதியை வெளிப்படுத்துகிறது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை நீங்கள் வளர்ந்த விதம் அப்படி நீங்கள் ஒரு நல்லவர் போல் நடந்து கொள்ள வேண்டாம்.

nadrkar sangam

அப்படியே நீங்கள் நல்லவர் என்றால் உங்களுடைய பாண்டவர் அணியில் இருந்து சிலர் வெளியேறி இன்னொரு அணியை உங்களுக்கு எதிராக உருவாக்கி இருக்க மாட்டார்கள். உங்களுடைய செயலின் பெருமிதப்படுபவர் என்றால் அதை சொல்லி வாக்கு கேட்கலாமே? இந்த முறை தேர்தலில் போட்டியிடாத என் தந்தையை ஏன் தாழ்வாக பேச வேண்டும்.

இத்தனை காலம் உங்களை மதித்தேன். ஒரு தோழியாக எப்பொழுதும் ஆதரவாக இருந்தேன். ஆனால் நீங்கள் இதை எவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள்  தரம் தாழ்ந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டீர்கள். ஆதலால் என்னுடைய வாக்கை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.