"எம்.குமரன் பார்ட் 2வில் நதியா கிடையாது!" இயக்குனர் மோகன் ராஜா!

"எம்.குமரன் பார்ட் 2வில் நதியா கிடையாது!" இயக்குனர் மோகன் ராஜா!


Latest update about jayam ravi movie

கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய திரைப்படம் "எம். குமரன் s/o. மஹாலக்ஷ்மி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அசின் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

cinema

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்த இப்படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட்டாகி , 2004ம் ஆண்டு அதிக வசூலைப் பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது. இந்தப் படம் தெலுங்கில் ரவி தேஜா நடித்த "அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி" படத்தின் ரிமேக் ஆகும்.

ஆனால் தெலுங்கை விட தமிழில் அதிகம் பேசப்பட்டு மிகப்பெரிய ஹிட்டானது இப்படம். இந்நிலையில் இப்படத்தின் பார்ட் 2விற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், அதற்கான கதை எழுதும் பணி முடிந்துவிட்டதாகவும் இயக்குனர் மோகன் ராஜா கூறியிருந்தார்.

cinema

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "எம். குமரன் பார்ட் 2விற்கான திரைக்கதையை எழுதிவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஆனால் இதில் நதியாவின் கதாப்பாத்திரம் இடம்பெறாது" என்று கூறியுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.