சினிமா

ஒரு தடவையாவது மீட் பண்ணுங்க.. சமந்தாவிடம் நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்த கோரிக்கை! யாரை? என்ன விஷயம் பார்த்தீங்களா!!

Summary:

ஒரு தடவையாவது மீட் பண்ணுங்க.. சமந்தாவிடம் நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்த கோரிக்கை! யாரை? என்ன விஷயம் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் இறுதியாக அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குட்லக் சகி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

அதுமட்டுமின்றி அவரது கைவசம் தற்போது நடிகர் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்ட, சிரஞ்சீவிக்கு தங்கையாக போலா ஷங்கர், தமிழில் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்கள் உள்ளன. இந்தநிலையில் கீர்த்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் கியூட்டான சிறுமி ஒருவரை சந்தித்துள்ளார்.

மேலும் அந்த சிறுமியிடம், உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும். வளர்ந்ததும் யாரை போல் ஆக போகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு சமந்தாவைதான் ரொம்ப பிடிக்கும். வளர்ந்ததும் அவரைப்போல ஆகப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

அந்த சிறுமி பேசிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், சமந்தா, இவர் உங்களின் அதிதீவிர ரசிகை. இவரை ஒரு முறையாவது மீட் பண்ணுங்க சாம் என கூறியுள்ளார். மேலும் இதனைக் கண்ட சமந்தாவும் யார் இந்த கியூட்டி என கேட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.

 


Advertisement