வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமலுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் பிரபலத்தின் தாய்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பை தாண்டி சிறந்த தொகுப்பாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தமிழகத்தில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கோலாகலமாக திரையுலகினர் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். மேலும் கமல் 60 நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் நடிகர் கமல் ஹாசனை புகழ்ந்து பேசியுள்ளனர். அவரது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அந்நிகழ்வை அடுத்து நடிகர் கமல் ஹாசன் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தனது காலில் ஏற்ப்பட்ட பிரச்சினையால் அவரது காலில் பிளேட் வைத்துள்ளனர். அதனை நீக்குவதற்காக தற்போது சிகிச்சை மேற்கொண்டார் கமல்.
இந்நிலையில் நல்ல முறையில் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பிய கமலை சுகாசினியின் தாய் ஆரத்தி எடுக்க, சுகாசினி மற்றும் சிலர் அவரை வீடுக்கு வரவேற்றுள்ளனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.