சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
அடக்கொடுமையே.! நடிகர் ஷாருகானுக்கு இப்படியொரு துயர நிலையா? பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்!!

பாலிவுட்டில் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான். இவர் இந்தி மட்டுமின்றி தமிழ் உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமில்லாது, உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு IPM நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் இருமாணவர்களிடம் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
மேலும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியதாக, IPM நிறுவனத்தின் தூதுவராக இருந்த நடிகர் ஷாருக்கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதனை தொடர்ந்து ஷாருக்கானிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் மனுதாரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஷாருக்கான் தனது தரப்பு விளக்க பதில் மனுவை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.