சினிமா

திருட்டுத்தனமான வேலை பார்த்த ரசிகன்.! குணமாக ஹரிஷ் கல்யாண் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

harish kalyan advised to fan

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதனை தொடர்ந்து அவர் அரிது அரிது,  சட்டப்படி குற்றம், பொறியாளன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 மேலும் அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார் . பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மற்றொரு சக போட்டியாளராக ரைசைவுடன் ஜோடி சேர்ந்து பியார், பிரேமம்,காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து தற்பொழுது இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  காதல் திரைப்படமான இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

 மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி பதிவுகளை வெளியிட்டு வந்தார்.அப்பொழுது ரசிகர் ஒருவர் படத்தை திருட்டுதனமாக பதிவிறக்கம் செய்து பார்த்தது தெரியவந்தது. இதனை அறிந்ததும் ஹரிஸ் கல்யாண் மிகவும் பொறுமையாக, நண்பா என்னுடைய தாழ்ந்த வேண்டுகோள். எந்த படமாக இருந்தாலும், எப்பொழுதும் படங்களை தியேட்டரில் சென்று பாருங்கள். திருட்டுத்தனமாக பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள் என கூறியுள்ளார்.
 


Advertisement--!>