சினிமா

தல அஜித்துடன் எடுத்த ஒத்த வீடியோவால், வாழ்க்கையை இழந்து தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அவர் எங்கு சென்றாலும் அவரை ரசிக

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அவர் எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் வளைத்துக் கட்டி செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அண்மையில் கூட சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்போட சென்ற அவருடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற நிலையில் பொறுமையிழந்த அஜித் அவரது செல்போனை பறித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது பெண் ஒருவர் அஜித்துடன் வீடியோ எடுத்ததால் வாழ்க்கையை இழந்து தற்கொலை முயற்சி வரை சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயது நிறைந்த பர்ஜானா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பரிசோதனைக்காக அஜித் வந்த நிலையில் தீவிர தல ரசிகையான அவர் அஜித்துடன் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அஜித் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாரா என கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பின்னர் நடிகர் அஜித் மனைவி ஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அவரை மருத்துவமனை வேலையில் சேர்த்தது. ஆனால் அங்கு அவருக்கு எந்த பணியும் கொடுக்காமல் அலைக்கழித்து பின்னர் மீண்டும் வேலையை விட்டு நீக்கியது. அதுமட்டுமின்றி லோன் போன்ற காரணத்தை காட்டி சான்றிதழ்களையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணால் வேறு வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் இதன் காரணமாக வயதான தாய் மற்றும் குடும்பத்தினரையும் கவனிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அஜித்திடம் கூற அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்ட நிலையில், அவர் முதலில் இதுகுறித்து அஜித்துடன் தெரிவிப்பதாக கூறிவிட்டு பின்னர் மறுத்துவிட்டாராம். இந்நிலையில் செய்வதறியாது பர்ஜானா தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் உதவி கிடைக்காதா என அந்த பெண் காத்துள்ளார்.


Advertisement