நடிகர் தனுஷுடன் டேட்டிங் போக ஆசைப்படும் இளம் நடிகை!

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையில் வெளியான படம் தான் ஜிப்ஸி. வெகு நாட்களாக பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது தான் அனைத்தும் நிறைவடைந்து ஒரு வழியாக திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் லால் ஜோஸ், சன்னி வெய்ன், சுசீலா ராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை நடாஷா சிங்கிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது அதாவது நீங்கள் யாரை கில் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் ஜீவாவை தான் என்று கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள். அதற்கு உடனே அவர் நடிகர் தனுஷிடன் என்று பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி நீங்கள் யாரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பதற்கு அவர் தளபதி விஜயை தான் என்று கூறியுள்ளார்.