சினிமா

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக பிரபல நடிகரா? வெளியான மாஸ் தகவல்!

Summary:

Chandramuki 2 update in tamil

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வடிவேலுவின் காமெடி என படம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தை இயக்க தனக்கு விருப்பம் இருப்பதாக இயக்குனர் AR முருகதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, முதல் பாகத்தின் இயக்குனர் பி. வாசு சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தை நான் ஏற்கெனவே கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்தப் படம் அங்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

அதே கதையை இன்னும் மெருகேற்றி பிரபல தமிழ் நடிகர் ஒருவரிடம் கூறியிருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனமும் தயாராக இருப்பதாகவும், விரைவில் சந்திரமுகி 2 படத்தை நானே இயக்குவேன் என இயக்குனர் பி. வாசு கூறியுள்ளார்.

ஆனால் ஒரு இடத்தில் கூட சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று இயக்குனர் பி. வாசு கூறவில்லை. ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது


Advertisement