"100 கோடி பட்ஜெட்டில் கேவலமான படம் தான் எடுக்கிற எடுக்குறாங்க" பத்திரிகையாளர்களிடம் கடுப்பில் பேசிய போஸ் வெங்கட்..

2002ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான "மெட்டி ஒலி" தொடரில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வெங்கட். இந்த கதாப்பாத்திரத்தின் பெயரையே தன் பெயரோடும் இணைத்து "போஸ் வெங்கட்" என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள போஸ் வெங்கட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும், இயக்குனராகவும் உள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பாரதிராஜாவின் "ஈரநிலம்" படத்தில் தான் முதலில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து தாம் தூம், சிந்தாமல் சிதறாமல், தலைநகரம், மருதமலை, சரோஜா, சிங்கம், ராமேஸ்வரம், வேதா, யாமிருக்க பயமே, ஜெய்ஹிந்த் 2, சகாப்தம், 36 வயதினிலே, சண்டி வீரன், தீரன் அதிகாரம் ஒன்று, கடல் குதிரைகள், தேவராட்டம் என பல படங்களில் நடித்துள்ளார் போஸ் வெங்கட்.
இந்நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து பேசியுள்ள போஸ் வெங்கட், "100கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கும் படங்களில் மக்களுக்கு என்ன ப்ரயோஜனம் உள்ளது? சிறிய பட்ஜெட் என்று சொல்லி பல நல்ல தரமான படங்களை தடுப்பது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.