ஈவு இரக்கமே இல்லையா! ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட பிகில் படக்காட்சி; வைரலாகும் வீடியோ

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தை தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது பிகில் படத்தில் விஜய் அவர்கள் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் போது கோல் போடவில்லை என்றால் அவர்கள் அனைவரும் இரு கோல் போர்டுக்கும் இடையே ஓட வேண்டும் என்ற தண்டனையை வழங்குவார்.
ஆனால் அந்த காட்சி தி மிராக்கல் சீசன் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து எடுக்கப்பட்ட திருட்டு சீன் என இயக்குனர் அட்லீ மீது குற்றம் சுமத்தும் வகையில் நெட்டிசன்கள் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் இயக்குனர் அட்லீக்கு ஈவு இரக்கமே இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈவு இரக்கமே இல்லையா @Atlee_dir நண்பா ..
— Senthil ❤ (@RageMaxxx) November 17, 2019
pic.twitter.com/D1t0w23JQg