ஒரே வருடத்தில் டாப் 10 பட்டியலில் முதல் இடம் பிடித்த பிக் பாஸ் யாஷிகா!

Bigg boss yashika won first place on most desirable women


Bigg boss yashika won first place on most desirable women

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதையடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

Yashika anandh

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பன் அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் யாஷிகா. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம். அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். யாஷிகாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.