சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சரவணன், முதன்முறையாக மனவேதனையோடு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

bigboss saravanan interview after leaving bigboss house

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக  பிக்பாசால் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சரவணன் இதுகுறித்து கூறுகையில், பிக்பாஸில் கலந்துகொண்டு, சில வாரங்கள் இருந்துவிட்டு பணம் பெற்று செல்லலாம் என எண்ணித்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே வந்தேன். ஆனால், எனக்கு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.  இது தெரிந்திருந்தால் நான் அங்கு சென்றிருக்கவே மாட்டேன்”.

bigg boss saravanan க்கான பட முடிவு

நான் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறி வெளியே அனுப்பிவிட்டார்கள். நான் கல்லூரி காலத்தில் பேருந்தில் விளையாட்டுத்தனமாக பெண்களை உரசினேன் என கூறியது  உண்மைதான். ஆனால் அதற்கு நான் பகிரங்கமாய் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.அப்படி இருந்தும் பிக்பாஸ் இவ்வாறு நடந்துகொண்டது மிகவும் வேதனையாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பெண்களிடம்  கண்ணியமாகதான் நடந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement