சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அர்ச்சனா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் முதல் புகைப்படம்!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அர்ச்சனா தனது மகளுடன் சந்தோசமாக செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். 

அதனை தொடர்ந்து கடந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்றது, இதில் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். பின்னர் கடந்த வாரம் முழுவதும் கோழிப்பண்ணை டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனா முதன்முதலாக தனது மகளுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அர்ச்சனாவின் மகள் சாரா My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு என உற்சாகத்துடன் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 


Advertisement