சினிமா

என்னது! இனி அஜித்தை பார்க்கவே முடியாதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வருத்தத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Summary:

ajith built dubbing studio in his housd

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர்.

அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும்  ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் பொதுவாகவே அஜித் வெளியில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். அப்படிய அவர் வெளியே வந்தாலும் அங்கு அவரது ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் அவருடன் புகைப்படம் எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

இந்நிலையில் படப்பிடிப்புகள் மட்டுமின்றி அவர் டப்பிங் செய்யும் ஸ்டுடியோவிலும் ரசிகர்கள் கூட்டம் கூடும். இதனால் பலருக்கும் பலவிதமான சங்கடங்களும் ஏற்படும். இந்நிலையில் அஜித் தற்போது தனது வீட்டிற்குள்ளேயே சொந்தமாக டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி வருகிறார். 

மேலும் அதன் பணிகள் இறுதிக்கட்ட  நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அஜித் அந்த ஸ்டுடியோவில்தான் இனி தனது படங்களுக்கு டப்பிங் பேசவுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதனால் டப்பிங் ஸ்டுடியோவில் இனி அஜித்தை காணமுடியாது என ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.


 


Advertisement