சீதாராமன் தொடரில் இருந்து விலகும் பிரியங்கா நல்காரி.! இனி புதிய சீதாவாக நடிக்கபோவது இந்த நடிகையா??Actress srinidhi replace for priyanga nalkari in seetha raman serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்கள் ஏராளம். அந்த வரிசையில் தற்போது மக்கள் மனதை கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தொடர் சீதா ராமன். இதில் ஹீரோ ராம் என்ற கதாபாத்திரத்தில் ஜே டிசோசா என்பவர் நடித்து வருகிறார். மேலும் சீதாவாக, கதாநாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வந்தார்.

அவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான ரோஜா தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்தொடரின் மூலம் அவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ரோஜா தொடர் முடிவிற்கு பின்னர் பிரியங்கா சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். இதற்கிடையில் அண்மையில் அவர் தனது காதலரான ராகுல் வர்மா என்ற  தொழிலதிபரை மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் கரம் பிடித்துள்ளார்.

Seetharaman

இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீதாராமன் தொடரில் இருந்து பிரியங்கா விலக போவதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது. தொடர்ந்து புதிய சீதாவாக நடிக்கப்போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில்
நடிகை ஸ்ரீநிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே தொடரில் கதாநாயகியாக நடித்தவர். இந்த தகவல் உண்மைதானா? சீதா கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.