சினிமா

அதுக்குள்ள 13 வருஷம் ஆயிடுச்சா.? ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.! என்ன விஷயம் தெரியுமா.?

Summary:

13 years of aishwarya rai and abhisek marriage life

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்கள் இன்றுவரை பிரபலம்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் நடந்துமுடிந்த இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது.

ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சானுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்திய அளவில் பிரபலமான இந்த ஜோடிக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் திருமண நாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து அதற்குள் 13 வருடங்கள் ஆகிவிட்டதா என ரசிகர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Advertisement