வெறித்தனமான லவ்! 8 மனைவிகளுடன் ஜாலியாக வாழ்ந்து வரும் மச்சக்கார இளைஞன்!!

வெறித்தனமான லவ்! 8 மனைவிகளுடன் ஜாலியாக வாழ்ந்து வரும் மச்சக்கார இளைஞன்!!


young-man-live-with-8-wives-in-same-house

தாய்லாந்தில் வசித்து வருபவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்களுடன் ஒரே வீட்டில், எந்த வித பிரச்சினையும் இல்லாமல் மிகுந்த காதலுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் யூடியூப் வீடியோவை வெளியிட்ட நிலையில் பிரபலமாகியுள்ளார்.

ஓங் டாங் சோரூட் அவரது முதல் மனைவி நோங் ஸ்ப்ரைட்டை நண்பரது திருமண விழாவில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின் இரண்டாவது மனைவியை நோங் எல்லை மார்க்கெட்டில் சந்தித்தாராம். முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்ட நிலையில் தனது முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாராம்.

அதனைத் தொடர்ந்து 3வது மனைவி நாங் நென்னை மருத்துவமனையிலும், 4,5,6 வது மனைவியை ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் சந்தித்து காதலை கூறித் திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் தனது தாயுடன் கோவிலுக்கு சென்றபோது 7வது மனைவியையும், விடுமுறையில் மனைவிகளுடன் பீச்சுக்கு சென்றபோது எட்டாது மனைவியையும் சந்தித்ததாக கூறியுள்ளார்.

அனைத்து திருமணத்தையும் தனது முந்தைய மனைவிகளுக்கு தெரிந்தே அவர் செய்தாராம். மேலும் அவர் அனைத்து மனைவிகளுடனும் அக்கறையாகவும், காதலோடும் இருப்பாராம். இதனாலேயே எத்தகைய பிரச்சினையும் இன்றி ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.