கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
விமான விபத்தில் உயிரிழப்பதற்கு முன் மனைவிக்கு இறுதியாக மெசேஜ்.. நெஞ்சை உலுக்கும் கணவரின் இறுதி நொடிகள்.!

தனது வாழ்க்கை இறுதி நொடிகளில் இருப்பதை கண்முன் உணர்ந்த கணவர், தனது மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒகையோ மாகாணம், கிளீவ்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
விமானம் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழ தொடங்கியுள்ளது. இதனால் தான் மரணிக்கப்போவதை நன்கு உணர்ந்துகொண்ட பெஞ்சமின், தனது மனைவிக்கு குறுஞ்செய்தி வாயிலாக வாழ்க்கையில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்த அவரின் இறுதி குறுஞ்செய்தியில், "நான் உன்னையும், நமது குழந்தைகளையும் நேசிக்கிறேன். என் மீது தவறுகள் ஏதும் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். நாங்கள் எஞ்சின் செயல்பாடுகளை இழந்துவிட்டோம். அவசரப்பட வந்துகொண்டு இருக்கிறது. என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.