43 வயதிலும் குறையாத அழகு! இளமையாக இருக்கும் நடிகை சினேகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி சினேகா, தற்போது 43 வயதாகும் போதிலும் இளமையை தக்கவைத்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்வை நடத்தி வருகிறார். சமீபத்தில் விஜய் நடித்த 'கோட்' படத்தில் மீண்டும் திரைக்கதைக்கு திரும்பியுள்ளார்.
சினேகாவின் டயட் ரகசியம்
சினேகா தனது உடல் எடையை கட்டுப்படுத்த உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். ஒரு நாளைக்கு தேவையான கலோரி அளவிற்கு மட்டும் உணவு எடுத்துக்கொள்கிறார். உடல் எடையை குறைக்க விரும்புவோர் போலவே, சினேகாவும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்.
சர்க்கரை தவிர்ப்பது எப்படி உதவுகிறது
சர்க்கரையை உணவிலிருந்து நீக்குவதால், உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சினேகா கூறியபடி, சர்க்கரையை தவிர்ப்பதின் மூலம் உடல் இலகுவாக மாறுவதோடு, சிறந்த சுறுசுறுப்பும் கிடைக்கிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதுபோல், ஒருவரின் தினசரி உணவில் சர்க்கரை இல்லாமல் இருந்தால் 200 முதல் 500 கலோரி வரை குறைக்கலாம். இது வாரத்தில் சுமார் 1 கிலோ எடையை குறைக்கக்கூடியதாக இருக்கும்.
சத்துகள் நிறைந்த உணவுகள் மட்டுமே
சினேகாவின் டயட்டில் கார்போஹைட்ரேட், புரதம், மினரல்ஸ் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. உப்பும் மசாலா பவுடரும் மிகக் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன.
தண்ணீர் குடிக்கும் முக்கியத்துவம்
இளமை தோற்றத்தை வைத்திருக்க, சினேகா தினமும் அதிகம் தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்து நிலைத்திருக்க உதவுகிறார். இது சருமத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இதையும் படிங்க: Video: நடுரோட்டில் ஸ்கேட்டிங் ஓட்டிய இளைஞர்! நொடியில் பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்! பதைப்பதைக்கும் வீடியோ...

-lknse.jpeg)