அடேங்கப்பா.. நடிகை மாளவிகா மோகனனுக்குள் இப்படியொரு திறமையா!! செம கெத்தாக எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா!!



actress-malavika-mohanan-interested-in-wildlife-photogr

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற அவர் விக்ரமின் தங்கலான் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

 இந்திய அளவில் பிரபலமான நடிகை 

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஹிருதயபூர்வம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவரது கைவசம் தமிழில் சர்தார் 2,  தெலுங்கில் தி ராஜா சாப் ஆகிய படங்கள் உள்ளன.

 போட்டோகிராபியில் ஆர்வம் 

நடிகை மாளவிகா மோகனன் நடிப்பை தாண்டி wildlife photography ல் மிகுந்த ஆர்வம் கொண்டவராம். நேரம் கிடைக்கும் போதெல்லாம்  வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க சென்று விடுவாராம். இந்த நிலையில் மாளவிகா மோகன் புலியை புகைப்படம் எடுப்பதற்கு சென்றபோது எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனைக் கண்டு ரசிகர்கள் மாளவிகா மோகனனிற்குள் இப்படியொரு அருமையான திறமையா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.